சமந்தாவின் குஷி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு!
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்துவருகிறார்.
சிவா நிர்வனா இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கேடகர், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் திகதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்குவரவிருக்கிறது.
இந்தப் படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகவிருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் காஷ்மீர் மலையில் விஜய் தேவரகொண்டா டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, ஹிஜாப் அணிந்த படி சமந்தா நமாஸ் செய்கிறார்.
இதனையடுத்து ஹிந்து ஹீரோ, முஸ்லீம் ஹீரோயின் ஆகிய இருவருக்கிடையேயான காதல் கதையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
![,[object Object],புர்கா, ஃபர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களால் அசாதராண சூழ்நிலை நிலவிவரும் நிலையில் இந்தப் படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது](https://images.news18.com/tamil/uploads/2023/05/Sam-7.jpg?im=resize,width=904,aspect=fit,type=normal)