திரிஷாவின் முன்னாள் காதலருடன் டேட்டிங் சென்ற பிக்பொஸ் நடிகை!

திரிஷாவின் முன்னாள் காதலருடன் டேட்டிங் சென்ற பிக்பொஸ் நடிகை!
  • PublishedMay 9, 2023

நடிகை  திரிஷாவுக்கு கடந்த 2015ல் வருண்மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டு இருவரும் பிரிந்தனர்.

மேலும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஒருவருடன் வருண் மணியன் டேட்டிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து அந்த நடிகையிடம் நேரடியாகவே பத்திரிக்கையாளர் கேட்ட நிலையில் அவர் கூறிய பதில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வருண் மணியனுடன், நடிகை பிந்து மாதவி டேட்டிங் செய்துள்ளார். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆம் உண்மைதான். ஆனால் அவை ஒரு காலத்தில் எடுக்கப்பட்டவை என வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *