34 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய ரஜினியின் நீண்ட நாள் ஆசை!

34 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய ரஜினியின் நீண்ட நாள் ஆசை!
  • PublishedMay 9, 2023

நடிகர் ரஜினி காந்த் ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் முன்பு கமலஹாசன் உடன் இவர் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் திரைப்படத்தில் தான் ரஜினி இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவராக நடித்திருந்தார்.

அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் முஸ்லிம் கேரக்டரில் நடிக்கவில்லை. 34 வருடங்களுக்குப் பிறகு இவர் நடிக்கும் இந்த கதாபாத்திரம் அவரே ஆசைப்பட்டு சொன்ன கேரக்டராம்.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த திரைப்படம் தான் ஜக்குபாய். இந்த படத்தின் கதை முதன் முதலில் ரஜினிகாந்த் ஓகே செய்து நடிப்பதாக இருந்துதான் பின்பு தனிப்பட்ட காரணங்களால் அது சரத்குமாரின் கைவசம் போனது.

ஒருவேளை அந்த ஜக்குபாயின் கேரக்டரை கூட லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரஜினி இதுபோன்று நிறைய கேரக்டர்கள் தானே ஆசைப்பட்டும் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *