கொடூரமான காட்சியில் நடிக்க தயாராகும் அர்ஜுன் : லியோ பற்றி வெளியாகிய முக்கிய அப்டேட்!

கொடூரமான காட்சியில் நடிக்க தயாராகும் அர்ஜுன் : லியோ பற்றி வெளியாகிய முக்கிய அப்டேட்!
  • PublishedMay 9, 2023

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை பிரபல ஹாலிவுட் படமான ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ கதையை தழுவியது என்று தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் தற்போது அர்ஜுன் ஷூட்டிங்கில் இணையவிருக்கும் நேரத்தில் அவர் அந்த ஹாலிவுட் படத்தில் நடிகர் ஹெட் ஹாரிஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஹெட் ஹாரிஸ் ‘கால் போகர்டி’ என்னும் பெயரில் மிக கொடூரமான வில்லனாக நடித்திருப்பார்.

அதே கேரக்டரை அர்ஜுன் தன்னுடைய வில்லத்தனத்தில் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும்  ஆக்சன் கிங் அர்ஜுன் லியோ படப்பிடிப்பில் இன்று முதல் இணைவது மற்றும் உறுதியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *