புளூ சட்டையிடம் மாட்டிய வெங்கட் பிரபு!
கஸ்டடி திரைப்படத்தின் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். நாக சைத்தன்யா, கீர்த்தி செட்டி, பிரியாமணி, அரவிந்த்சாமி போன்ற பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு அவரை வச்சு செய்திருக்கிறார். கஸ்டடி பற்றிய தன்னுடைய விமர்சனத்தை கூறியிருக்கும் அவர் லாஜிக்கே இல்லாமல் இப்படம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வெங்கட் பிரபு தேவையில்லாத கேரக்டர்களை வேஸ்ட் லக்கேஜ் போன்று தூக்கி சுமந்து படத்தை உப்புமா படமாக மாற்றி இருக்கிறார் எனவும் பங்கம் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் 90களில் நடக்கும் கதை போன்று இப்படம் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் 90 வருடத்திற்கு முன்பு இருப்பது போல படத்தை இயக்குனர் எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.