ஷாருக்கானை தொடர்ந்து வருண் தவானை இயக்கும் அட்லீ!
இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல பொலிவுட் நடிகரான வருண் தவானை இயக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
வருண் தவான், அட்லீ மற்றும் முராத் கெடானியுடன் தனது புதிய திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதன்படி இந்த படம் வரும் ஜுலை மாதத்தின் இறுதியில், அல்லது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும் எனக் கூறுகிறார்கள். இந்த படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.