11 வருடங்கள் போய்ட்டு!! அப்பாவாகி விட்டார் ராம்சரண்

11 வருடங்கள் போய்ட்டு!! அப்பாவாகி விட்டார் ராம்சரண்
  • PublishedJune 20, 2023

பிரபல தெலுங்கு ராம்சரணுக்கும், அவரது மனைவி உபாசனாவிற்கும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தை பிறந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணும், சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மகதீரா, ரங்கஸ்தலம், ஆர்.ஆர்.ஆர் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள ராம்சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

கேம் சேஞ்சர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த வேளையில், சினிமாவில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டார் நடிகர் ராம்சரண்.

கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதன் காரணமாக தான் இந்த முடிவை எடுத்திருந்தார் ராம்சரண்.

நேற்று இரவு அவரது உபாசனா, ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அன்மதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி இன்று காலை ராம்சரணின் மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள ராம்சரண் – உபாசனா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ராம்சரண் உபாசனா ஜோடி கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது. திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த ராம்சரண் – உபாசனா ஜோடி கடந்தாண்டு இறுதியில் குட் நியூஸ் சொன்னது.

அதன்படி தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த ராம்சரண், தான் தந்தை ஆகப்போவதாக நெகிழ்ச்சி உடன் கூறி இருந்தார். தற்போது மகள் பிறந்துள்ள குஷியில் திளைத்துப் போய் உள்ளாராம் ராம்சரண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *