”இது யாரு பாத்த வேலையா இருக்கும்……”: லோகேஷை புலம்பவிட்ட நெட்டிசன்கள்!

”இது யாரு பாத்த வேலையா இருக்கும்……”: லோகேஷை புலம்பவிட்ட நெட்டிசன்கள்!
  • PublishedJune 20, 2023

லேகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் படம் பற்றிய விடயங்களை சஸ்பென்ஸாகத்தான் வைத்திருப்பார்.

படம் வெளியில் வரும் வரை ஊகங்கள் எழுந்தாலும், அதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் ரியாலிட்டி வேற மாதிரி தான் இருக்கும்.

இந்நிலையில் லியோ படத்தின் முக்கிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. இதனால் லோகேஷ் தற்போது அப்செட்டில் இருக்கிறாராம்.

விஜய்க்கு அப்பா சஞ்சய் தத் என்றால் அர்ஜுனுக்கு என்ன கேரக்டர்.. 'லியோ'  படத்தின் சுவாரஸ்யமான தகவல்..! - News - IndiaGlitz.com

இதன்படி இப்படத்தில்  மெடோனா செபாஸ்டின் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியது. அவர் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதேபோல்,  ஆக்ஷன் கிங் அர்ஜுன்- சஞ்சய் தத் அண்ணன் தம்பியாக நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது. மேலும் இப்படத்தின் சூட்டிங்-க்கு ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஒரு பெரிய கஞ்சா தோட்டமே போட்டு இருக்கிறாராம் லோகேஷ்.

இது குறித்த அப்டேட்டும் வெளியாகி யாரு எப்படி இது போன்ற அப்டேட்டுகளை வெளியிடுகிறார் என ஒரு சிபிஐ போல வலை வீசி தேடி வருகிறார் லோகேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *