விஜய்கு முன்னரே 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய பிரபல ஹீரோ!

விஜய்கு முன்னரே 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய பிரபல ஹீரோ!
  • PublishedJune 4, 2023

நடிகர் விஜய்,  வெங்கட்பிரபு இயக்கில் தளபதி 68 படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க பட நிறுவனம் முன்வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

ஆனால் விஜய்க்கு முன்னரே ஒரு ஹீரோ அசால்டாக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் அது வேறு யாரும் இல்லை.

ராஜமெளலி செல்ல பிள்ளையான பிரபாஸ் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நாக் அஸ்வின் இயக்கிவரும் பான் – இந்தியா படமான “ப்ராஜெக்ட் K” என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இதுவரை அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான்,  அக்ஷய் குமார்,  ரஜினி காந்த் இருந்து வந்த நிலையில் இப்போது இவர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் பிரபாஸ்.

ஆனால் நடிகர் விஜய் தளபதி 68 படத்திற்கு 200 கோடி வாங்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதற்கு முன்னரே பிரபாஸ் அசால்டாக 200 கோடி வாங்க ரூபாய் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *