காதலர்களாக விக்ரம், ஐஸ்வர்யா ராய்!! தமிழ் சினிமாவில் நடப்பது என்ன? பரபரப்பு செய்தி

காதலர்களாக விக்ரம், ஐஸ்வர்யா ராய்!! தமிழ் சினிமாவில் நடப்பது என்ன? பரபரப்பு செய்தி
  • PublishedMay 14, 2023

மணிரத்னம், சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து 4 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது.

இதுவரை ‘ராவணன்’, ‘ராவண்’, ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய நான்கு படங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையேயான கெமிஸ்ட்ரியை விரும்பும் ரசிகர்கள், அவர்கள் எந்தப் படத்திலும் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை என்றும், ஒருவரையொருவர் பிரிவது அல்லது இறப்பதுமாகவே இருக்கின்றது என ரசிகர்கள் மத்தியில் ஒரு மனக்கவலை உள்ளதை மறுக்க முடியாது.

இந்த மனக்கவலைக்கு மருந்து கொடுக்கும் வகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் காதலை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஸ்கிரிப்டை ஏற்கனவே முடித்துவிட்டதாகவும் கோலிவுட்டில் தற்போது பரபரப்பான செய்தி பரவி வருகிறது.

இதனால் சியான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைவதை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாகத்தான் அமையப்போகின்றது.

எனினும் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *