ரொமான்ஸ் காட்சியின் போது தூங்கி விழுந்த விஜய். திரிஷா ஜோடி!

ரொமான்ஸ் காட்சியின் போது தூங்கி விழுந்த விஜய். திரிஷா ஜோடி!
  • PublishedMay 15, 2023

விஜய்,  த்ரிஷா இருவரும் சுமார் 14 வருடங்கள் கழித்து லியோ திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

அதனாலேயே படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சகட்டமாக இருக்கிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தில் ஒரு ரொமான்ஸ் காட்சியின் போது விஜய்,  திரிஷா இருவரும் தூங்கி வழிந்த சம்பவம் தற்போது பலரையும் வியப்பாக்கி இருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தில் கலங்கரை விளக்கத்தின் மீது விஜய்,  த்ரிஷா இருவரும் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது விஜய் குளிர் அதிகம் எடுப்பதால் திரிஷாவின் ஷாலை வாங்கி போர்த்திக் கொண்டு படுத்திருப்பார்.

இந்த காட்சியை எடுப்பதற்கு இயக்குனர் 15 மணி நேரம் கஷ்டப்பட்டாராம். ஏனென்றால் இரவு 2 மணிக்கு தான் அந்த காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பிருந்தே பட குழு அதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கடைசியில் ஷாட் எடுக்கும் போது நள்ளிரவு என்பதால் விஜய்,  திரிஷா இருவரும் அங்கேயே தூங்கி வழிந்தபடி இருந்திருக்கிறார்கள். இதை பார்த்த இயக்குனர் அவர்களை செல்லமாக கடிந்து கொண்டாராம்.

தன் பிறகு ஒரு வழியாக அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி திரைக்குப் பின்னால் பல கஷ்டங்கள் இருந்தாலும் படத்தில் பார்க்கும் போது அந்த காட்சி நன்றாக இருந்ததாக திரிஷா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *