பூதாகரமாக வெடித்த “த்ரிஷா” சர்ச்சை… திடீரென அந்தர் பல்ட்டி அடித்த அரசியல்வாதி

பூதாகரமாக வெடித்த “த்ரிஷா” சர்ச்சை… திடீரென அந்தர் பல்ட்டி அடித்த அரசியல்வாதி
  • PublishedFebruary 20, 2024

பிரபல நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்ட ஏ.வி ராஜுவிற்கு எதிராக பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் அவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள எஸ்டேட்டில் அதிமுக நிர்வாகிகள் 100 பேர் சுமார் ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் நடிகை த்ரிஷா அங்கு அழைத்துவரப்பட்டதாகவும் பிரபல நடிகர் ஒருவர்தான் அவரை அங்கு அழைத்து வந்தார் என்றும், பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஏ.வி ராஜு.

மேலும் அந்த நடிகைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அவர் பேசியுள்ளார். இந்த நிலையில் இது தமிழகமெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோலிவுட் உலகை சேர்ந்த பலரும் ராஜீவுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வந்தனர்.

நடிகை திரிஷாவும் இந்த விஷயம் குறித்து தனது கண்டனத்தை எழுப்பினார்.

மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ஏ.வி ராஜு அவர்கள் அந்தர் பல்டி அடிக்கும் விதமாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

“த்ரிஷாவை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார்” என்று கூறியதாகவும், எந்த நடிகைகையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். நான் எப்பொழுதும் அவ்வாறு பேசுபவன் இல்லை என்றும், தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி

திரிஷாவை இழுத்து ஆபாச பேச்சு; சர்ச்சையை கிளப்பிய அரசியல்வாதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *