2 மணி நேரத்திற்கு பல லட்சம் கேட்ட நடிகை மீனா… விஷயத்தை போட்டு உடைத்த பிரபலம்

2 மணி நேரத்திற்கு பல லட்சம் கேட்ட நடிகை மீனா… விஷயத்தை போட்டு உடைத்த பிரபலம்
  • PublishedFebruary 21, 2024

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மீனா.

நடிகை மீனா கடத்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா எனும் மகள் இருக்கிறார்.

மீனாவை போலவே அவரது மகள் நைனிகாவும் சினிமாவிற்கு வந்துவிட்டார்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணத்திற்கு பின் மீனா பெரிதும் மீடியாக்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது மீண்டும் பழையபடி மீடியா பக்கம் வர துவங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘நடிகர், நடிகைகள் முன்பெல்லாம் பேட்டி கேட்டால், அந்த ஸ்டூடியோவில் இருப்பேன், இந்த ஸ்டூடியோவில் இருப்பேன் வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என கூறுவார்கள். ஆனால், தற்போது பேட்டி கேட்டால், எவ்வளவு பணம் தருவீங்க என பேரம் பேசுகிறார்கள். அப்படி சமீபத்தில் பிரபல Youtube சேனல் ஒன்று நடிகை மீனாவை பேட்டி எடுக்க கேட்டுள்ளனர். அதற்கு மீண்டும் எவ்வளவு மணி நேரம் என கேட்டுள்ளார். 2 மணி நேரம் போதும் மேடம் என கூறிய பின், 2 மணி நேரத்திற்கு ரூ. 13 லட்சம் தரவேண்டும்’ என கூறினாராம் மீனா. பயில்வான் கூறிய இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *