விஜயை கைவிட்டு ஆஸ்தான இயக்குனர் : அக்கடதேச நடிகர்கள்களுக்கு வலைவீசியுள்ளார்!

விஜயை கைவிட்டு ஆஸ்தான இயக்குனர் : அக்கடதேச நடிகர்கள்களுக்கு வலைவீசியுள்ளார்!
  • PublishedMay 27, 2023

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தை அட்லி இயக்குவார் என்றும் சிலர் கூறிவந்தனர்.

இந்நிலையில், விஜய் இவை எல்லாவற்றையும் மறுத்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்தார். இந்த விடயத்தை ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். வெங்கட் பிரபுவின் அண்மைய படங்கள் தோல்வியை தழுவியதுதான் விமர்சனத்திற்கான காரணம்.

இவையொருப்புறம் இருக்க விஜயின் ஆஸ்தான இயக்குனராக அட்லி அவரை களட்டி விட்டதுதான் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது, அட்லி, சன்பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜயின் அடுத்த படம் வரும் என எதிர்பார்தவர்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியது.

இவையொருப்புறம் இருக்க அட்லி இப்போது   கேஜிஎஃப் நடிகர் யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்கும் கதை சொல்லி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இவர் சொன்ன கதை பிடித்துப் போனதால் இவர்களில் யாரையாவது ஒருவரை வைத்து படத்தை இயக்கப் போகிறார்.

இதனால் அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் அக்கடதேச நடிகர்கள் தான் நடிக்கிறார்கள். அத்துடன் இப்படத்தை பான் இந்தியா படமாக எடுப்பதற்கு சன் பிக்சர்ஸ் முடிவெடுத்து இருக்கிறது.

இதுதான் இவர்கள் இறங்கும் பான் இந்தியாவின் முதல் படம். அதனால் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுப்பதற்கு சன் பிக்சர்ஸ் மட்டும் அட்லீ காய் நகர்த்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *