சஞ்சய் தத்தை பார்த்து பிரமித்துபோன விஜய்!

சஞ்சய் தத்தை பார்த்து பிரமித்துபோன விஜய்!
  • PublishedMay 27, 2023

நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இந்நிலையில், பொலிவுட் ஸ்டாரான சஞ்சய் தத்தும் படப்பிடிப்பில் இணைந்துக்கொண்டுள்ளார்.

ஒரு பெரிய பாலிவுட் ஹீரோ எப்படி தமிழ் படத்தில் நடிப்பார்,  படப்பிடிப்பில் பழகுவார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வந்த நிலையில் சஞ்சய் நடந்து கொள்ளும் விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

மதிய உணவு இடைவேளையில் கூட இவர் தன்னுடைய கேரவனுக்கு செல்லாமல் சக நடிகர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறாராம். சில நேரங்களில் உதவி இயக்குனர்களுடன் கூட அமர்ந்து சாப்பிடுகிறாராம்.

இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய்க்கு ஒரு பெரிய ஹீரோ எப்படி இவ்வளவு எளிமையாக நடந்து கொள்கிறார் என்று ஆச்சரியப்பட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடமே இதைப்பற்றி சொல்லி இருக்கிறாராம்.

மேலும் நானும்,  என்னை போன்ற சக நடிகர்களும் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று பிரமித்து போய் பேசி இருக்கிறார் தளபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *