பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் துணிவு படத்திற்கு பிறகு அடுத்த படம் வெளியாக சில வருடங்கள் எடுத்தது.
இதனால் ரசிகர்கள் ரொம்பவே பீல் செய்தார்கள், ஆனால் இந்த வருடம் ஆரம்பத்தில் அவர்களுக்கு கொண்டாட்டம் தரும் வகையில் பிப்ரவரி மாதம் விடாமுயற்சி ரிலீஸ் ஆனது.
அப்படத்தை தொடர்ந்து அஜித் செம வேகத்தில் முடித்த படம் குட் பேட் அக்லி, இந்த படத்திற்கு தெறி லுக்கில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தின் சில வீடியோக்களை படக்குழு வெளியிட அஜித் ரசிகர்கள் படம் செமயாக இருக்கும் என தெரிகிறது, முதல் நாளே படத்தை பார்த்தே ஆக வேண்டும் என ஆர்வத்தில் உள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
புஷ்பா 2 படம் மூலம் பெரிய வெற்றிக் கண்ட இவர்கள் குட் பேட் அக்லி படத்தை ரூ. 500 கோடி வசூல் பட பட்டியலில் இணைத்து விட வேண்டும் என்று பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
குறிப்பாக இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமே 1000 தியேட்டர்களில் வெளியிடவும், அஜித்தின் முந்தைய படங்களை விட உலகளவில் அதிக தியேட்டர்களில் வெளியிட போகிறார்களாம்.