எஸ்.ஜே. சூர்யாவுடன் இளம் சென்சேஷனல் நடிகை பிரீத்தி… அதிரடி அப்டேட்

எஸ்.ஜே. சூர்யாவுடன் இளம் சென்சேஷனல் நடிகை பிரீத்தி… அதிரடி அப்டேட்
  • PublishedJune 28, 2025

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பின் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து இன்று வில்லனாக கலக்கிக்கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

இவர் இயக்கத்தில் இருந்து சற்று விலகி முழுமையாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், இசை படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

ஆம், இவர் இயக்கத்தில் அடுத்ததாக கில்லர் எனும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்துள்ளது. இதில் கார்த்தி, புஷ்கர் – காயத்ரி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் 25 வயது இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி அஸ்ரனி நடிக்கிறார். ஆம், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *