குபேரா பிளாப்பிற்கு இந்த 2 காரணமா?…அதிர்ச்சி தகவல்

குபேரா பிளாப்பிற்கு இந்த 2 காரணமா?…அதிர்ச்சி தகவல்
  • PublishedJune 28, 2025

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸான படம் குபேரா. நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் தமிழில் விமர்சகர்ளால் பாராட்டப்பட்டும் போதுமான வசூலையும் வரவேற்பை பெறவில்லை. இதற்கு தெலுங்கு ஊடகங்கள் பல காரணங்களை முன்வைத்து வருகிறது. அதுமட்டுமின்றி இணையவாசிகலும் அந்த ஊகங்களை இணையத்தில் அதிகம் பரப்பி வருகிறார்கள்.

அதாவது தனுஷின் குபேரா படம் ஓடாததற்கு முக்கிய காரணமே நயன் தாரா, விக்னேஷ் சிவன் தானாம். இவர்களுக்கு இடையில் பல சர்ச்சைகளை பொதுவெளியில் தனுஷ் பேசியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

நயன் – விக்கி திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வீடியோவில் பயன்படுத்தியதற்கு தனுஷிடம் அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காக நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு தனுஷ் மீதான நன்மதிப்பை ரசிகர்கள் மத்தியில் குறைத்துவிட்டது என்று கூறப்படுகிறது

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, தனுஷ் விவாகரத்து செய்த்தும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலரும் தனுஷ் படத்தை புறக்கணித்து வருவதாகவும், அதனால் தான் ராயம் படமே உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிகள் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவ, இதுபோன்ற காரணங்கள் தான் என்று தெலுங்கு ஊடகங்களும் இணையவாசிகளும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *