சிம்பு, சந்தானம் இணையும் படம் ட்ரோப்…அதிரடி தகவல்

சிம்பு, சந்தானம் இணையும் படம் ட்ரோப்…அதிரடி தகவல்
  • PublishedJune 17, 2025

நடிகர் சிம்பு, தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபலம்.

படங்களை தாண்டி பல சர்ச்சைகளில் அவர் சிக்கியபோதும் ரசிகர்கள் அவரை கைவிடவே இல்லை, அதுதான் அவருக்கு கிடைத்த பெரிய சொத்து என பலமுறை கூறியுள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு படு வேகமாக அடுத்தடுத்த படங்கள் நடித்து வருகிறார்.

கடைசியாக சிம்பு, கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார், ஆனால் படம் சரியாக ஓடவில்லை.

சிம்பு, பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பில் புதிய படம் உருவாக இருந்தது சிம்பு இதில் கல்லூரி மாணவராகவும் நீண்ட காலம் கழித்து சந்தானம் காமெடியனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.

தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காரணம் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்பட்ட ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் படத்தில் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *