ஆமதாபாத் விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

ஆமதாபாத் விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்
  • PublishedJune 17, 2025

குஜராத்தின் ஆமதாபாதில் , பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம், கடந்த 12ம் தேதி கீழே விழுந்து வெடித்தது. இதில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உடல் கருகியும், சிதைந்தும் உயிரிழந்தனர்.

அவர்களின் டி.என்.ஏ., எனப்படும் மரபணு மாதிரி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோர விபத்து குறித்து நடிகர் ரஜினி வேதனை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி கூறுகையில், ”ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனிமேல் அந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாதுனு வேண்டிக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *