பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசிய…பாடகி ஜோனிடா

பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசிய…பாடகி ஜோனிடா
  • PublishedJune 17, 2025

தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு பஞ்சமே இல்லை.அந்த காலத்தில் விரல்விடும் அளவிற்கு பாடகர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது கணக்கே இல்லாமல் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள் உள்ளார்கள்.

அப்படி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பாடல்கள் பாடி அசத்தி வருபவர் தான் ஜோனிடா காந்தி.

கனடாவில் பிறந்து வளர்ந்த இவர் ஹிந்தியில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற மெண்டல் மனதில் படம் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோனிடா காந்தி பேசும்போது, எனது நண்பர்களின் பதிவை இன்ஸ்டாவில் பார்த்துக் கொண்டிருந்த போது நான் கண்ட ஸ்டோரி என்னை அதிரச் செய்தது.

ஒரு ஆண் தனது அந்தரங்கப் பகுதியைப் பகிர்ந்து அதன் பின்னணியில் எனது போட்டோவை வைத்திருந்தார், எனக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. இது மாதிரியான நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன்.

இது மாதிரியான சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதால் யார் மீதும் வழக்குத் தொடரவில்லை. ஆனால் இதுவும் பாலியல் சீண்டல்தான், இதுபோலவே பலர் எனக்குத் தொல்லை கொடுத்துள்ளனர் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *