ரெட்ட தல படத்தில் தனுஷ் பாடிய பாடல்…

ரெட்ட தல படத்தில் தனுஷ் பாடிய பாடல்…
  • PublishedApril 4, 2025

மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ரெட்ட தல’.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தில் சாம்.சி.எஸ் இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். பெரும்பாலும் தனுஷ் அவர் படங்களை தாண்டி வெளி படங்களுக்கு அவ்வளவாக பாடியதில்லை.

நெருங்கியவர்களுக்கு மட்டும் ஓரிரு பாடல்கள் பாடுவார். தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *