இட்லி கடை புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு

இட்லி கடை புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு
  • PublishedApril 4, 2025

தனுஷ் இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இட்லி கடை’. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்று முன்னர் அறிவித்திருந்தார்கள்.

ஆனால், அந்தத் தேதியில் படம் வராது, தள்ளிப் போகும் என தகவல்கள் வெளிவந்தன. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததே இதற்குக் காரணம்.

ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இதுவரையில் தள்ளி வைப்பு பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம், படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் மட்டுமே படம் தள்ளிப் போவதைப் பற்றிப் பேசியிருந்தார்.

இதனிடையே, புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஜுன் மாதம் படம் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *