தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரின் மகள் காலமானார்
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் எம்கே தியாகராஜ பாகவதர். தன்னுடைய குரல் வளத்தால் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்நாட்டை கட்டிப் போட்டவர் இவர்.
எம்ஜிஆர் உள்ளிட்டவர்களுக்கே மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தவர் எம்கே தியாகராஜ பாகவதர் என்பது சிறப்பாக பார்க்கப்படுகிற. மக்களின் அடிப்படை ரசனையான பாட்டும் இசையும் பாடுபவரின் குரல்வழி நம்மை வசீகரிக்கும் வல்லமை படைத்தது.
தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. பல்வேறு குரல்களை மாற்றம் செய்து பல்வேறு முயற்சிகளில் பாடல்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பாடகர் இல்லாமலேயே பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
வெளியூர்களில், வெளிநாடுகளில் இருந்தபடியெல்லாம் பாடகர்கள் தங்களது குரலை பதிவு செய்து அனுப்பும் வசதியும் வந்துவிட்டது. இந்த தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே தன்னுடைய சிறப்பான குரல் வளத்தால் ரசிகர்களை மயங்கடித்தவர் எம்கே தியாகராஜ பாகவதர்.
தன்னுடைய நடிப்பால் மட்டுமில்லாமல் பாடல்களாலும் வசீகரித்தவர். ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்று அவர் பாடிய பாடலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
சென்னை வில்லிவாக்கத்தில் வசித்துவந்த சுசீலா கடந்த சில ஆண்டுகளாகவே வயதுமூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது காலமானார்.
அவருக்கு வயது 89. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுசீலாவின் மறைவிற்கு திரைத்துறையிர் தங்களது இரங்கல்களை நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சூப்பர்ஸ்டாரின் மகளாக இருந்த சுசீலாவின் மறைவு பலதரப்பட்டவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி, கமல், விஜய் என ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ஹீரோக்களை பின்பற்றியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் அந்த காலத்திலேயே இதை நடைமுறைப்படுத்தியவர் எம்கே தியாகராஜ பாகவதர்.