சாதி வெறியோடு ஆபாசமாக பேசிய நடிகர்… யார்னு பாக்கனுமா?

சாதி வெறியோடு ஆபாசமாக பேசிய நடிகர்… யார்னு பாக்கனுமா?
  • PublishedJune 8, 2023

தமிழ் சினிமாவில் ‘சின்னதாய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இந்த படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து ‘கிழக்குச் சீமையிலே’, ‘உழவன்’, ‘பசும்பொன்’, உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

சமீப காலமாக இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், சீரியல் பக்கம் சாய்ந்தார்.

அதே போல் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி, பாஜக கட்சியின் கலை இலக்கிய பொறுப்பாளராகவும் விக்னேஷ், சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் உதவி இயக்குனர் சுபாஷ் என்பர், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை விக்னேஷிடம் கேட்ட போது,சாதியின் பெயரை சொல்லி விக்னேஷ் திட்டியது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் உதவி இயக்குனரை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் விக்னேஷ்.

இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டரில் கூறி இருந்தார்.

அது மட்டுமன்றி தமிழ்நாடு காவல்துறை இவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் விக்னேஷ், அந்த இயக்குனரிடம் பகிரங்கமாக தன்னுடைய மன்னிப்பை கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *