விக்கி – நயன்! அதுக்குள்ள ஒரு வருசம் ஆகிட்டு!! விக்கி என்ன செஞ்சிருக்கார் பாருங்க…

விக்கி – நயன்! அதுக்குள்ள ஒரு வருசம் ஆகிட்டு!!  விக்கி என்ன செஞ்சிருக்கார் பாருங்க…
  • PublishedJune 9, 2023

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், தன்னுடைய காதல் மனைவிக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் .

‘நானும் ரவுடி தான்” படத்தில் நடிக்க கமிட் ஆன நயன்தாரா காதலித்து பின்னர் லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இணைந்தார்.

இருவரும் 2016 ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அதனை வெளிப்படுத்தி கொள்ளாமல், சுமார் 7 ஆண்டு காதல் ஜோடிகளாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்தனர்.

நிலையில், கடந்த ஜூன் 9-ந் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் சென்னை ECR சாலை, மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.

இவர்களது திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதிம் கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மேலும் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருந்தனர்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பிரபலங்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அதே போல் நயன்தாரா – விக்கி திருமணத்தில் கலந்து கொள்ள 200 பேருக்கு மட்டுமே அனுமதியும் வழக்க பட்டது.

கடற்கரையில் உள்ள கண்ணாடி மாளிகையில் திருமணம் செய்து கொண்ட பின்னர், இரண்டு முறை ஹானி மூனுக்கும் சென்று வந்தனர் விக்கிஷ் – நயன் ஜோடி.

திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே,திடீர் என வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றெடுத்தனர்.

மேலும் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்திய வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டு 1 ஆண்டு முடிவடைகிறது.

இதுகுறித்து மிகவும் உருக்கமாக பதிவுக்கு, சில ரொமான்டிக் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

“லவ் யூ தங்கமே! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளோம்! இன்னும் வெகுதூரம் போகவேண்டும்! ஒன்றாகச் நிறைய சாதிக்க வேண்டும்!

நம் வாழ்வில் உள்ள அனைத்து நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும் எங்கள் திருமணத்தின் இரண்டாவது ஆண்டை எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுடன் கொண்டு வருவோம். எங்கள் குழந்தைகள் உயிர் & உலகம் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *