அந்த இடத்தில் கை வைத்து தாறு மாறாக பேசிய இயக்குனர்.. மற்றுமொரு நடிகை பகீர்

அந்த இடத்தில் கை வைத்து தாறு மாறாக பேசிய இயக்குனர்.. மற்றுமொரு நடிகை பகீர்
  • PublishedApril 22, 2024

பிரபல நடிகை காயத்ரி ரேமா இயக்குநர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று ஓபனாக பேசியிருக்கும் விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர் டோரா, விழித்தெழு, பேய் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது.

அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காயத்ரி ரேமா கூறியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் அளித்த பேட்டியில், “நடிகை பிந்து மாதவியை வைத்து அந்த இயக்குநர் படம் எடுத்தவர். அவரது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் நான் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது என்பதுதான் உண்மை.

படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த இயக்குநருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது பின் பகுதியில் கை வைத்துவிட்டார். உடனே எனக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது.

நான் அவரிடம், கையை எடுங்கள். இது உங்களோட ஷூட்டிங் ஸ்பாட். இங்கே வைத்து உங்களை ஓங்கி அறைந்தால் அது உங்களுக்குத்தான் அசிங்கம். இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறினேன். அதற்கு அவர் உடனே, நீ அப்படி இருக்குற. உன்னை பார்த்தவுடன் எனக்கு வேற மாதிரி தோணிடுச்சு என்று பச்சையாக பேசினார்.

அந்த இயக்குநரின் பெயரை சொல்ல விரும்பவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *