அண்ணனுடன் மனைவியை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கணவர்.. கதறும் சீரியல் நடிகை

அண்ணனுடன் மனைவியை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கணவர்.. கதறும் சீரியல் நடிகை
  • PublishedMarch 10, 2024

பிரபல சீரியலில் நடிகை தீபா, தனது கணவரின் அண்ணன் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான தீபா, அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி, ஆண்டாள் அழகர், பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, விக்ரம் வேதா, மோதலும் காதலும் சீரியல் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், தற்போது தன்னை அடைய துடிக்கும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறும், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்த நடிகை தீபா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த போது, சாய் கணேஷ் பாபு என்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னார். அப்போது, என் அப்பா மற்றும் மகனிடம் கேட்க சொன்னேன். சாய் கணேஷ் பாபு என் அப்பாவிடம் பேசி சம்மதத்தை வாங்கினார். இதையடுத்து, நானும் அவரும், கணவன் மனைவியாக சில வருடங்கள் வாழ்ந்து வந்தோம்.

எங்களது திருமணத்திற்கு அவரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், கடந்த ஆண்டு சாய் கணேஷ் பாபுவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. என் கணவரின் தாயார் மற்றும் கணவரின் அண்ணன் நான் வேறு ஜாதி என்பதால் என்னை மிகவும் தரக்குறைவாக நடத்தினார்கள்.

மேலும், என்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு, என் கணவரை தூண்டிவிட்டு பிரச்சனை செய்தனர். எனக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான் அதை சொல்லியும் என்னை மோசமான வார்த்தையால் பேசி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், என் கணவரின் அண்ணன் ராமகிரிவாசன் என்னுடைன் நீ வரவேண்டும் என செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதால், ஈசியாக என்னை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம் தவறான முறையில் நடந்து கொள்கிறார்.

நீ என்னுடன் வா, நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன், என் தம்பியை தொல்லை பண்ணாதே என்கிறார். இதுகுறித்து என் கணவரிடம் கூறினேன், அண்ணனிடம் அட்ஜெட் செய்து கொண்டால் தான், என்னுடன் நிம்மதியாக வாழ முடியும், என் குடும்பத்தில் வாழ முடியும் என்று என் கணவரே என்னை வற்புறுத்துகிறார்.

கணவரின் அண்ணன் ராமகிரிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல இடத்தில் புகார் கொடுத்தும், அவர் பணத்தை கொடுத்து அனைவரையும் சரிகட்டி விடுகிறார். இதனால், எனக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. இப்போது எனக்கு ஆதரவாக இருப்பது என் அப்பா மட்டும் தான் அவருக்கும் இந்த பிரச்சனையால் எதாவது ஆகிவிடுமோ என்கிற பயம் இருக்கிறது.

இந்த பிரச்சனையில் நான் தனி ஆளாக போராடிக் கொண்டு இருக்கிறேன் ஆனால், எனக்காக பேச முன்வரவில்லை. ஆனால், இறந்து விட்டால் RIP போட்டு வருத்தம் தெரிவிப்பார்கள் என்று கதறி அழுதுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *