அரசியல் கூட்டணியை உறுதி செய்தார் கமல் – கடைசியில் ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்

அரசியல் கூட்டணியை உறுதி செய்தார் கமல் – கடைசியில் ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்
  • PublishedMarch 10, 2024

நடிப்பு ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் என கமல் தனது வேலைகளை செய்துகொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் என அடுத்தடுத்து இவருடைய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி நடிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் அரசியலுக்கும் கொடுத்து வருகிறார்.

அதன்படி வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் கமலின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது.

இன்று கமல் முதல்வர் ஸ்டாலினை திமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். அங்கு கூட்டணி குறித்தும் சீட் ஒதுக்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கையெழுத்து ஆகியுள்ளது.

அதன்படி கமல் வர இருக்கும் தேர்தலில் நானும் என் கட்சியும் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் தான்.

அது பற்றி கூறியிருக்கும் கமல்,

பதவி ஆசைக்காக இந்த கூட்டணியில் இணையவில்லை. நாட்டிற்காக ஒன்று சேர்ந்துள்ளோம். இந்த தேர்தலில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் திமுகவுக்கு ஆதரவாக தங்கள் கட்சி பிரச்சாரம் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அடுத்த வருடம் நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் திமுக கமல் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கி இருக்கிறது. ஆக மொத்தம் கூட்டணியை உறுதி செய்து விட்டு இந்த தேர்தலில் கமலின் கட்சி போட்டியிடாதது எதிர்பாராத சம்பவமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *