நடிகை ஹேமா சவுத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நடிகை ஹேமா சவுத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
  • PublishedDecember 20, 2023

பழம்பெரும் நடிகையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கல்லூரி தோழியுமான ஹேமா சவுத்ரி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் கன்னட நடிகை ஹேமா சவுத்ரி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ஹேமா சவுத்ரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மயங்கிய நிலையில் பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவருடைய உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் அயர்லாந்தில் உள்ள ஹேமா சவுத்ரியின் மகன், இதுகுறித்து கேள்விப்பட்டு அங்கிருந்து இந்தியா திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்களும் தொடர்ந்து ஹேமா குணமடைய தங்களின், வாழ்த்துக்களையும், வேண்டுதல்களையும் முன்வைத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *