“என்னோட சப்போர்ட் இவருக்கு தான்…” ரச்சிதா போட்ட பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்

“என்னோட சப்போர்ட் இவருக்கு தான்…” ரச்சிதா போட்ட பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்
  • PublishedDecember 20, 2023

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா.

விஜய் டிவி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ரச்சிதா. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் இருவருமே சீரியல்களில் நடித்து வந்தனர். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரச்சிதா உச்சத்துக்கு சென்றார். மறுபுறம் தினேஷும் பூவே பூச்சூடவா தொடர் மூலம் பேமஸ் ஆனார். இப்படி இருவருமே டிரெண்டிங் ஜோடியாக வலம் வந்தனர்.

இதனிடைய இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக தினேஷும் ரச்சிதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சீசனில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது கூட, இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர்.

ஆனால் வெளியே வந்த பின்னர் தினேஷ் தனக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக கூறி ரச்சிதா காவல்நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

கடந்த சீசனில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது போல் இந்த சீசனில் தினேஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

அவர் சில சமயங்களில் ரச்சிதா உடன் தான் மீண்டும் சேர விரும்புவதை வெளிப்படுத்தி வந்தாலும், ரச்சிதா அதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. அவர் தினேஷை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருப்பது மட்டும் அவரின் பதிவுகள் மூலம் தெரிகிறது.

அந்த வகையில் தற்போது இந்த சீசனில் தான் ஆதரவளிக்கும் போட்டியாளர் யார் என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் ரச்சிதா. தன்னுடைய சப்போர்ட் விசித்ராவுக்கு தான் என கூறி இருக்கும் அவர், தினேஷை எதிர்ப்பதையும் இதன் மூலம் சூசகமாக அறிவித்துள்ளார்.

ஏனெனில் கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் அதிகம் சண்டையிட்டுக் கொள்வது தினேஷும் விசித்ராவும் தான். அப்படி இருக்கையில் விசித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து தினேஷ் மீதுள்ள கோபத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் கருதி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *