திடீரென விலகிய கஜோல்!! பாலிவுட்டில் பரபரப்பு

திடீரென விலகிய கஜோல்!! பாலிவுட்டில் பரபரப்பு
  • PublishedJune 9, 2023

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள கஜோல், நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் காஜலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது.

இந்த நிலையில், நடிகை கஜோல் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன் என குறிப்பிட்டு தான் விலகுவதை அறிவித்து உள்ளார்.

நடிகை கஜோலுக்கு டுவிட்டரில் 36 லட்சம் பாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.4 கோடிக்கு மேல் பாலோவர்களும் உள்ளனர். இவ்வளவு பாலோவர்கள் இருந்தும் தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ள தனது இதர பதிவுகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார் கஜோல்.

அவரின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *