பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார் – சோகத்தில் திரையுலகம்

பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார் – சோகத்தில் திரையுலகம்
  • PublishedDecember 1, 2023

மலையாள மொழி மட்டுமல்லாமல் தளபதியின் பீஸ்ட் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஆர். சுப்பலட்சுமி நேற்று இரவு கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை ஆர். சுப்பலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.

மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறந்த படகியாகவும் திகழ்ந்து வந்துள்ளார்.

அதே போல மலையாளம் மட்டும் இல்லாமல் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

அதே போல இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *