மீடியாவில் மனைவியை காட்டாத மைக் மோகன்.. பயில்வான் ரங்கநாதன் உடைத்த இரகசியம்

மீடியாவில் மனைவியை காட்டாத மைக் மோகன்.. பயில்வான் ரங்கநாதன் உடைத்த இரகசியம்
  • PublishedDecember 1, 2023

காதல் திருமணம் செய்து கொண்ட மைக் மோகன், மீடியாவில் இதுவரை தனது மனைவியை காட்டியதே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம்,பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார்.

80 மற்றும் 90 கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் மோகன், ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிஸியாக நடித்து வந்த மோகன் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன மைக் மோகன் தற்போது, விஜய்யின் தளபதி68 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். கதாநாயனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த மோகன், தளபதிபதி 68 படத்தில் வில்லன் அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சினிமாவின் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில்,

“தமிழ் சினிமா வரலாற்றில் காதல் மன்னன்கள் என்றால், ஜெமினி கணேசன், கமலஹாசன் அடுத்து மைக் மோகன் தான். இவர் 80களில் கொடி கட்டிப்பறந்தார். மோகன் இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு கமலும் ஒரு வகையில் காரணம் எனலாம்.

ஏன் என்றால், 80களில் கமல்ஹாசன் பிற மொழிப்படங்களிலும், இந்திப்படங்களிலும் கமல் கவனம் செலுத்தி நடித்துக்கொண்டு இருந்ததால், கோலிவுட்டில் அந்த இடத்தை மோகன் பூர்த்தி செய்துவிட்டார். மேலும், இவரின் வெற்றிக்கு முதுகு எலும்பாக இருந்தவர் இளையராஜா.

கமலுக்கு அடுத்தபடி காதல் திரைப்படங்களில் வித்தியாசமாக நடித்து பெண் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மோகன், டிசைனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுவரை தனது மனைவியின் போட்டோவை அவர் வெளியிடவே இல்லை. ஏன் என்றால், சினிமா வேறு வாழ்க்கை வேறு என்ற எண்ணம் கொண்ட மோகன், குடும்பத்தை மீடியாவுக்கு காட்டியதே இல்லை.

மோகன் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அதைவிட அதிகமாக கிசுகிசுவில் சிக்கினார். இவர் எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கிறாரோ அந்த நடிகையுடன் கிசுகிசுக்கப்படுவார். ஏன் என்றால், எந்த நடிகையுடன் நடித்தாலும், அந்த நடிகையுடன் கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *