இணையத்தில் வைரலாகும் நடிகை த்ரிஷாவின் சொத்து விபரம்!

இணையத்தில் வைரலாகும் நடிகை த்ரிஷாவின் சொத்து விபரம்!
  • PublishedMay 6, 2023

நடிகை த்ரிஷா அண்மையில் தனது பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தற்போது இணையத்தில் இன்னுமொரு விடயம் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்காக மட்டும் ரூபாய் 3 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். அதே போல் விஜய்யுடன் ஜோடியாக லியோ படத்தில் நடிக்க ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

அதுமட்டுமல்ல மாதம் 70 லட்சம்,  ஆண்டிற்கு 10 கோடி வரை திரிஷாவிற்கு விளம்பரங்களின் வாயிலாக கிடைக்கிறது. மேலும் சென்னையில் த்ரிஷாவிற்கு மட்டும் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள சொந்த வீடும்,  ஹைதராபாத்தில் ஒரு சொகுசு பங்களாவும் உள்ளது.

அதுமட்டுமல்ல த்ரிஷா பல முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மூலமும் சம்பாதித்து வருகிறார். இவரிடம் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக்,  70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ், கிளாஸ் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் உள்ளது. ஆக மொத்தம் திரிஷாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 85 கோடி ரூபாவாகும். இந்த விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *