புதிய திரைப்படத்தில் கமிட்டான கவின்!

புதிய திரைப்படத்தில் கமிட்டான கவின்!
  • PublishedMay 6, 2023

சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றியீட்டிய பிறகு தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்தவகையில் கவின், நடன இயக்குனரான சதீஸ் இயக்குனராக அவதாரம் எடுக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் அயோதி, திரைப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணி, கவினுக்கு ஜோடியாகவுள்ளாராம்.

முதல்முறையாக இந்த கூட்டணி உருவாகி உள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி  அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது. ஆகையால் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *