தன்னை வாழ வைத்த நிறுவனத்திற்கு வாய்பினை வழங்கிய ரஜினி!
தலைவர் 173 படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். இது அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். ஆனால் இந்த படத்தை யார் தயாரிப்பது என்பதில் போட்டி நிலவியது.
குறிப்பாக சன் பிக்சர்ஸ், லைக்கா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தை கைப்பற்ற முனைப்பு காட்டின.
ஆனால் ரஜினி தன்னை வாழ வைத்த ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு தனது 173 ஆவது படத்தை தயாரிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுவும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது அந்த நிறுவனம், சற்று முடங்கியிருந்த நிலையில், அதனை தூக்கி நிறுத்தும் விதமாக ரஜினியின் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.