திடீரென சமூக வலைத்தளத்தில் கதறி அழுத நடிகை சதா!

திடீரென சமூக வலைத்தளத்தில் கதறி அழுத நடிகை சதா!
  • PublishedMay 6, 2023

ஜெயம் ரவியின் அறிமுகப்படமான ஜெயம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சதா. அதன் பிறகு உச்ச நட்சத்திரமாக இருந்த அஜித் விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக சதா வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களிலேயே இவரது மார்க்கெட் சரியா தொடங்கியது.

இந்நிலையில் திடீரென சோசியல் மீடியாவில் சதா கதறி கதறி அழுத வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இவ்வாறு அவர் செய்ததற்கான காரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதாவது சதா சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு மும்பையில் ஹோட்டல் பிசினஸ் ஒன்றை தொடங்கினார். எர்த்லிங்ஸ் கஃபே என்ற பெயரில் 4 வருடங்களுக்கு மேலாக இயங்கி கொண்டிருக்கிறது.

மேலும் சூட்டிங் நாட்களைத் தவிர பெரும்பாலமான நேரங்களை ஹோட்டலில் தான் செலவிடுகிறாராம். இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இப்போது ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்திருக்கிறார். அதாவது ஹோட்டல் இருக்கும் இடத்தின் உரிமையாளர் தற்போது கடையை காலி பண்ண சொல்கிறாம்.

மேலும் இந்த கடையை மீட்க எவ்வளவோ முயற்சித்தும் பயனளிக்கவில்லை என கூறி கதறி அழுதுள்ளார். இது குறித்து  அவர் பேசியுள்ள  வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *