நடிகர் மனோபாலா கடைசியாக வெளியிட்ட அறிவுரை!

நடிகர் மனோபாலா கடைசியாக வெளியிட்ட  அறிவுரை!
  • PublishedMay 6, 2023

நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு பின் தற்போது அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

குறித்த காணொலியில்,   அது என்னவென்றால் தன்னுடைய உடம்பு இப்படி ஆனதற்கு காரணமே என்னுடைய சிகரெட் பழக்கத்தினால் தான்.  நான் இயக்குனராக பெரிய உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளைக்கு 200 சிகரெட் குடிப்பேன்.

இதைப் பார்த்து பலரும் என்னை கண்டித்து இருக்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் நான் அவர்கள் சொல்வதை கண்டுக்கவே மாட்டேன் என் இஷ்டப்படி தான் இருந்திருக்கிறேன்.

பிறகு ஒரு கட்டத்தில் நான் கொஞ்சம் மோசமான நிலைமைக்கு ஆளான பிறகு இந்தி பட நடிகை ரேகா,  நான் குடிக்கும் சிகரெட் சாம்பலை ஒரு பாக்கெட்டில் போட்டு அதை கட்டி தொங்கவிட்டு நீ எவ்வளவு குடிக்கிறாய் என்று இதை வைத்தே புரிந்து கொள்.

இதுக்கு மேலேயும் நீ தொடர்ந்து இதே மாதிரி செய்தால் உன்னுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நீயே யோசித்துப் பார் என்று எனக்கு அறிவுரை கூறினார். அத்துடன் என் உடம்பும் இவ்வளவு ஒல்லியானதற்கு காரணம் அந்த சிகரெட் தான்.

பிறகு என்னுடைய உடம்பை பார்த்து எனக்கே மிக வேதனையை கொடுத்தது. அந்த அளவுக்கு எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டேன். அதனால் ஒரு கட்டத்தில் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன்.

ஆனாலும் நிறுத்திய பிறகு அதனுடைய வலியால் பிரச்சனை ஏற்பட்டதால் மிகவும் கஷ்டத்தை சந்தித்திருக்கிறேன். என்னால சரியாக மூச்சை கூட விட முடியாமல் தவித்தேன். அதன் பிறகு எல்லாருக்கும் அட்வைஸ் கொடுக்கிறேன் யாரும் சிகரெட்டை தயவு செய்து குடிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *