தீபாவளிக்கு வெளியாகும்… லால் சலாமின் மகிழ்ச்சியான அறிவிப்பு

தீபாவளிக்கு வெளியாகும்… லால் சலாமின் மகிழ்ச்சியான அறிவிப்பு
  • PublishedNovember 10, 2023

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்’. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி தினமான நவ.,12ம் தேதி காலை 10:45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளி தினத்தில் வெளியாவதால் டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டீசர் ரன்னிங் டைம் 1 நிமிடம் 34 வினாடிகள் எனக் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *