பல வருடங்களுக்குப் பின் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் களமிறங்கும் ரஜினி-கமல்

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் களமிறங்கும் ரஜினி-கமல்
  • PublishedFebruary 5, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வேட்டையனை முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

அதேபோல் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தலைவர் 171, தக் லைஃப் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1980, 1990களில் ரஜினி, கமல் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கமாக இருந்தது. இருவருமே நீயா நானா என பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டனர்.

கடைசியாக ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒன்றாக ஒரே தேதியில் ரிலீஸாகின. இதில் ரஜினியின் சந்திரமுகி தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பல ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ரஜினி, கமல் இருவரின் படங்களும் ஒன்றாக ரிலீஸாகவுள்ளன.

அதன்படி ரஜினியின் தலைவர் 171, கமல் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் இரண்டும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171-ல் நடிக்கவுள்ளார்.

ரஜினி – லோகேஷ் இணையும் தலைவர் 171 ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. எப்போதும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ஷூட்டிங் செல்வது லோகேஷின் வழக்கம்.

ஆனால் இந்த முறை படப்பிடிப்பு முடியும் போது தான் தலைவர் 171 ரிலீஸ் தேதியை அறிவிக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதேநேரம் தலைவர் 171 படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினியும் சன் பிக்சர்ஸும் பிளான் செய்துள்ளார்களாம்.

அதேபோல் கமலின் தக் லைஃப் படத்தையும் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம். இந்தாண்டு கமல் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி என மூன்று படங்கள் வெளியாக வாய்ப்புள்ளன.

அதனால் தக் லைஃப் ஷூட்டிங் விரைவில் முடிந்துவிட்டாலும் படத்தை 2025 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளாராம். இதனையடுத்து ரஜினியின் தலைவர் 171, கமலின் தக் லைஃப் இரண்டுமே அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினி, கமல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

again kamal and rajini fight with box office

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *