மறுபடியும் கிரிக்கெட் படமா? மீண்டும் ரஜினியா? என்னம்மா இப்படி பண்றீங்களே

மறுபடியும் கிரிக்கெட் படமா? மீண்டும் ரஜினியா? என்னம்மா இப்படி பண்றீங்களே
  • PublishedMarch 5, 2024

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதனை சௌந்தர்யா இயக்குவதாகவும், கௌரவ வேடத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை இந்திப்படத் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலாவை சந்தித்துப் பேசினார். அந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டு, இருவரும் ஒரு படத்தில் இணையப் போவதாகவும், விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சஜித் நடியட்வாலா முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வராலாறை திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும், சௌந்தர்யா அதனை இயக்குவதாகவும், ரஜினி அதில் கௌரவ வேடத்தில் நடிக்கயிருப்பதாகவும் மும்பையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அவரது நடிப்பில் லால் சலாம் படம் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டுப் பின்னணியில் இந்து, முஸ்லீம் மத ஒற்றுமையை பேசிய இப்படத்தில் மொய்தீன் பாயாக முக்கிய வேடத்தில் ரஜினி நடித்திருந்தார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா படத்தை இயக்கியிருந்தார். பாக்ஸ் ஆபிஸில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், இளைய மகள் இயக்கத்தில், அதே கிரிக்கெட் பின்னணி கதையில் ரஜினி நடிக்கயிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *