மீண்டும் வி எழுத்தில் வெளியான அஜித் படத்தின் டைட்டில்!

மீண்டும் வி எழுத்தில் வெளியான அஜித் படத்தின் டைட்டில்!
  • PublishedMay 1, 2023

அஜித்தின் துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்த படமான ஏகே 62 மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

இந்நிலையில், ஏகே 62 திரைப்படத்தின் டைட்டில் அஜித்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

அதன்படி  அஜித்தின் நிறைய படங்கள் வி செண்டிமெண்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி விவேகம்,  விசுவாசம், வலிமை ஆகிய லிஸ்டில் ஏகே 62 படமும் இணைந்துள்ளது.

அதாவது ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர்கள் தினமான இன்று விடாமுயற்சி என்று டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் தனது திரை வாழ்க்கையில் அஜித் விடாமுயற்சியால் வெற்றி கண்டவர். அதேபோல் இந்த படமும் 100மூ வெற்றி என்று ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

மேலும் விடாமுயற்சி படம் லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கிறது. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்ற இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *