விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்…
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிகளின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மகள் இருக்கிறார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே உறவு சரியில்லை என்று தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கூட இருவரும் சேர்ந்து வருவதை தவிர்த்து வருகின்றனர். விவாகரத்து தொடர்பான சோசியல் மீடியா பதிவுகளுக்கு அபிஷேக் பச்சன் ஆதரவாக பதிவிட்டு வருகிறார். மற்றொரு புறம் ஐஸ்வர்யா ராய் தனது பெயரில் இருந்த பச்சன் பெயரையே நீக்கிவிட்டார்.
இந்நிலையில் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து ஒன்றில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயின் தாயார் பிரிந்யா ராயும் கலந்து கொண்டார். மூன்று பேரும் விருந்தில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். ஐஸ்வர்யா ராய் மிகவும் சிரித்த முகத்துடன் இருந்தார்.
அதோடு தனது கணவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் தனது தாயார் மற்றும் கணவருடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக்கொண்டார். அவர்களோடு சேர்ந்து நடிகை ஆயிஷா ஜுல்காவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் இந்த பார்ட்டியில் கருப்பு ஆடையில் ஜொலித்தனர்.
சமீபத்தில் அபிஷேக் பச்சன் தனது மனைவி குறித்து மிகவும் பெருமையாக பேசியிருந்தார். அதில் தனது மனைவி குழந்தையை பொறுப்புடன் கவனித்துக்கொள்வதாகவும், நான் நடிப்பில் கவனம் செலுத்த முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.