அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் இர்பானை ஏன் திட்டுகின்றார்கள்?

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் இர்பானை ஏன் திட்டுகின்றார்கள்?
  • PublishedOctober 25, 2024

யூடியூப்பர் இர்பான் தன் மனைவி ஆசிஃபா குழந்தை பெற்றெடுத்த போது டெலிவெரி வார்டுக்குள் சென்று வீடியோ எடுத்தது மட்டுமின்றி அங்கு குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி இருக்கிறார்.

அவரின் இந்த செயலுக்கும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ மிகவும் சர்ச்சை ஆனதால் அதை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் இர்பான். இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே முதல் கட்டமாக இர்பானை வீடியோ எடுக்க அனுமதித்தது மட்டுமின்றி குழந்தையின் தொப்புள் கொடியையும் வெட்ட வைத்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது ஆக்‌ஷன் எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அந்த மருத்துவமனை மருத்துவம் பார்க்க 10 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதில் தொடர்புடைய இர்பான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், இர்பான் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி, இதுபோன்ற சம்பவத்தில் அஜித் ஈடுபட்டபோது அவருக்கு ஏன் பாராட்டு கிடைத்தது என்பதை விளக்கி உள்ளார். நடிகர் அஜித் குமார் தன்னுடைய மனைவி ஷாலினியின் பிரசவத்தின் போது, அவர் அருகில் இருந்து தன் கையில் இருந்த ஹேண்டி கேமரா மூலம் வீடியோ எடுத்தாராம்.

பிரசவத்தின் போது பெண்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தால் தான் புரியும் என்பதற்காக அஜித் அதை வீடியோ எடுத்தாராம். அவரின் இந்த செயலுக்கு அப்போது அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இர்பான் வீடியோ எடுத்தது மட்டுமின்றி கொஞ்சம் எல்லைமீறி குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி இருக்கிறார். அது மிகப்பெரிய தவறு என்றும் மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி அந்த பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *