ஒரு வழியாக இறுதி முடிவெடித்த அஜித் : அடுத்தடுத்து வரும் ஏகே 62 இன் சூப்பர் அப்டேட்!
நீண்ட இழுப்பறிக்கு பிறகு அஜித் இரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரக்கூடிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படம் முதலில், விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பிறகு மகிழ்த்திருமேனியிடம் வழங்கப்பட்டது. இந்த படத்தை அஜித்திற்கு ஏற்றதுபோல் கதையை ரெடி பண்ணும் வேலைகள் மும்முரமாக நடைபெற்றாலும், இதுவும் ஒரு ஆப்ஷனாக தான் சொல்லப்பட்டதே தவிர உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே இந்த படத்தை இயக்கம் லைக்கா நிறுவம் கொரியன் திரைப்படம் ஒன்றை பரிந்துறை செய்திருந்தது. இதும் இழுப்பறி நிலையில் தான் இருந்தது. தற்போது ஒருவழியாக எல்லாப் பிரச்சினைகளும் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடைசியாக அஜித் தன்னுடைய கதையை தான் ஓகே சொன்னதால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் மகிழ்திருமேனி. அஜித் சொன்ன கரெக்சன் எல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறார். நிச்சயம் இந்த படம் அவருடைய கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.
ஆகையால் இனி வரும் நாட்களில் ஏகே 62 படத்தை குறித்த அப்டேட் வரிசையாக வர துவங்கும். அதே சமயம் முதல் கட்ட படப்பிடிப்புக்கு எல்லாம் ஏற்பாடுகளும் அறக்கப் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. அதை போல் படத்தின் கதைக்கு ஏற்ப மற்ற நடிகர்இ நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.