பயணம் செய்யக் கூட காசு இல்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்!

பயணம் செய்யக் கூட காசு இல்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்!
  • PublishedApril 9, 2023

ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சரத்குமார் அதன் பிறகு 90களில் டாப் நடிகராக வலம் வந்தார். இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது கடந்த கால அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், ‘நான் சொந்த படம் எடுத்து நஷ்டமாகி அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டு வெறும் ஐந்து ரூபாயுடன் நடுரோட்டில் நின்றேன். பயணம் செய்வதற்கு கூட காசு இல்லாமல் பயந்து பயந்து பஸ்ஸில் செல்வேன். அப்போது நடுராத்திரியில் என் நண்பன் ஒருவன் 150 ரூபாய் கொடுத்து உதவி செய்தான்.

அதன்பின் படிப்படியாக ஒவ்வொரு விஷயங்களும் மாற்றி இப்போது ஒரு நல்ல நிலையில் இருந்து வருகிறேன். ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் தற்கொலை என்ற பெயரில் பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் செல்கிறார்கள்.

இது தவறான விஷயம். அந்த பிரச்சனை எப்படியும் நம்மளை விட்டு சென்று விடும்இ அதனால் தைரியமாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *