காதல் மனைவிக்கு பிறந்தநாள்… தல கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்

காதல் மனைவிக்கு பிறந்தநாள்… தல கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்
  • PublishedNovember 21, 2024

ஷாலினி, முன்னணி நாயகியாக இருக்கும்போதே நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகினார்.

கடந்த 22 ஆண்டுகளாக ஷாலினி ஒரு படத்தில் கூட தலைகாட்டவில்லை. இருந்தாலும் அவரின் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.

அந்த அளவுக்கு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் ஷாலினி.

பின்னர் நடிகர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட ஷாலினி, கடந்த 2000-ம் ஆண்டு அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

அஜித் – ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இன்றளவும் அதே காதலோடு தான் இருக்கின்றனர். இதனிடையே நடிகை ஷாலினி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அதன்படி ஷாலினி தன்னுடைய பிறந்தநாளை தனது தங்கை ஷாமிலி, தம்பி ரிச்சர்டு, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் கொண்டாடி உள்ளார். நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் அவரால் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

இருந்தாலும் தன் மனைவிக்கு சர்ப்ரைஸாக ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார் அஜித். அது வேறெதுவுமில்லை தனக்கு பிடித்த லெக்சஸ் காரை மனைவி ஷாலினிக்கு பரிசாக கொடுத்துள்ளார் அஜித்.

கணவர் கொடுத்த காஸ்ட்லி கிஃப்டை தொடர்ந்து ஷாலினியின் பிறந்தநாளுக்கு அவரது மகன், மகள், தங்கை, தம்பி ஆகியோர் சேர்ந்து கேக் வெட்டி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *