அஜித்துக்கு மூளையில கட்டியா? மேனேஜர் வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்

அஜித்துக்கு மூளையில கட்டியா?  மேனேஜர் வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்
  • PublishedMarch 8, 2024

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், 15க்கும் மேலான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார்.

சமூகத்தில் மாற்றத்தை உண்டு பண்ணும் போராளியான கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளதாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது விடா முயற்சி பல கட்டங்களாக வெளிநாடுகளில் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் வேளையில் சென்னைக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே பறந்து கொண்டிருந்தார் அஜித்.

விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாததால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே காட்டுத் தீ போல் பரவியது.

அஜித்துக்கு மூளையில் கட்டி எழுப்பதெல்லாம் உண்மை இல்லை வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருப்பதாக கண்டறியப்பட 1/2 மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.

ஆப்ரேஷன் முடிந்த நேற்று இரவே நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அஜித் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *