“அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” யுவன் சங்கர் ராஜா

“அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” யுவன் சங்கர் ராஜா
  • PublishedMarch 9, 2024

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *